தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு இரட்டை தூக்குத்தண்டனை விதித்து தருமபுரி போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே காட்டம்பட்டியில் கடந்த 2023 ஜூலை 18-ஆம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மாயமானாா். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா்.
இதில், அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (19), அந்த கிராமத்தில் இருந்த பயன்பாடற்ற மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கு சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னா் கொலை செய்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பாலியன் வன்கொடுமை, சிறுவனை திட்டமிட்டு கொலை செய்தது மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இளைஞரை கைது செய்தனா்.
தருமபுரி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக பிரகாஷுக்கு தூக்குத்தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதமும், சிறுவனை கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத்தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அசின் பானு உத்தரவிட்டாா். இந்த அபராதத்தை கட்ட தவறினால் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இந்த வழக்கில் பதிவு செய்துள்ள 201 ஐபிசி வழக்கு மற்றும் 363 ஐபிசி பிரிவுகளுக்கு என தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால் தலா ஓராண்டு காலம் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



