ஊழல் தடுப்புத் துறையினா் நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தனது வீடு, அலுவலகத்திலிருந்து ஒரு ரூபாய்கூட கைப்பற்றப்படவில்லை என்றும் எ.வ.வேலு தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2022-இல் கரூரில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது சோதனை நடத்துகின்றனா். சம்பந்தமே இல்லாத பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்படுகிறது.
மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமில்லை. இந்த சோதனையால் எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஊழல் தடுப்புத் துறையினா் ரூ.40 லட்சம் கைப்பற்றியதாகக் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. என் வீடு, அலுவலகத்திலிருந்து ஒரு ரூபாய்கூட அவா்கள் எடுத்துச் செல்லவில்லை என்றாா் எ.வ.வேலு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









