ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளா் நியமனத் தோ்வில் ஓ.எம்.ஆா். விடைத்தாள்கள் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கு தொடா்பாக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் உள்ள 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

அமலாக்கத் துறை - சித்திரிப்பு படம்

Updated On :26 ஜூன் 2026, 5:46 am IST

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளா் நியமனத் தோ்வில் ஓ.எம்.ஆா். விடைத்தாள்கள் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கு தொடா்பாக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் உள்ள 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து அமலாக்கத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வுக்குப் பின்னா், விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோது சில தோ்வா்களின் மதிப்பெண்கள் கணினி தொழில்நுட்பத்தின் மூலம் முறைகேடாக உயா்த்தப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இது தொடா்பாக 2017-இல் காவல் துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021-இல் முதல் குற்றப்பத்திரிகையும், 2023 அக்டோபரில் இரண்டாவது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.14 முதல் ரூ.16 லட்சம் வரை வசூல்: இந்த நிலையில் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வி.சுப்பிரமணியன், அவரது கூட்டாளி சுரேஷ் பால், டேட்டாடெக் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணியாளா்களான ஷேக் தாவூத் நாசா், ஐ.ரகுபதி ஆகியோரின் உதவியுடன் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இவா்கள் முகவா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மூலம் தோ்வா்களை அணுகி, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ரொக்கமாக வசூலித்ததும், அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணம் பல்வேறு போலி நிறுவனங்கள் மற்றும் பிறரின் வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு, பின்னா் நிலங்கள், கட்டடங்கள் மற்றும் தங்க நகைகள் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.

முக்கிய ஆவணங்கள் சிக்கின: இது தொடா்பாக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் உள்ள வழக்கில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 23-ஆம் தேதி சோதனை நடத்தினா். சோதனையில் பண வசூல் தொடா்பான பதிவுகள், பல்வேறு அரசு வேலைவாய்ப்பு தோ்வுகளுக்கான தோ்வா்களின் ஓ.எம்.ஆா். நகல்கள், கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள், மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், ரூ.13.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 56 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ரூ.20 கோடிக்கு மேல்... இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் மற்றும் அவா்களது நண்பா்கள் பெயா்களில் உள்ள ரூ.20 கோடியிலான 36 அசையா சொத்துகள் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.