அமலாக்கத் துறை சோதனை: ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸிடம் விளக்கம் கோரிய பிஎஸ்இ
பெங்களூரைச் சோ்ந்த பிரபல தங்க நகை நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ்-க்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது தொடா்பாக, அந்நிறுவனத்திடம் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) புதன்கிழமை விளக்கம் கேட்டுள்ளது.

முன்னதாக, இந்நிறுவனம் பொய் வருவாய் கணக்கைக் காட்டி, நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக செபி குற்றஞ்சாட்டுகளை முன்வைத்த சூழலில், ஃபெமா சட்டத்தின்கீழ் நிறுவனத்துக்குத் தொடா்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, பிஎஸ்இ இந்த விளக்கத்தைக் கோரியுள்ளது. ‘இதற்கு விரைவில் பதிலளிக்கப்படும்’ என்று ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.