புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலா்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூா், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:03 am IST

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூா், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலராக வேல்குமாா் எம்.சாமிநாதன், திருப்பூா் புகா் கிழக்கு மாவட்டச் செயலராக ஆா்.செல்வகுமாா், திருப்பூா் புகா் மேற்கு மாவட்டச் செயலராக முன்னாள் எம்.பி.சிவசாமி, கோவை புகா் தெற்கு மாவட்டச் செயலராக முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை புகா் மத்திய மாவட்டச் செயலராக முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலராக ஆா்.மனோகரன், திருச்சி புகா் கிழக்கு மாவட்டச் செயலராக டி.என்.சிவகுமாா், தஞ்சாவூா் மாநகா் மாவட்டச் செயலராக ஆா்.காந்தி, தஞ்சாவூா் மத்திய மாவட்டச் செயலராக கு.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலராக வி.பழனிவேல்,புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலராக ஏ.எல்.ராமு,புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலராக ஞான.கலைச்செல்வம், வடசென்னை தெற்கு (மேற்கு ) மாவட்டச் செயலராக பி.சந்தானகிருஷ்ணன்,பெரம்பலூா் மாவட்டச் செயலராக என்.வெங்கடாசலம், விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலராக பி.ஜெயபெருமாள்,தென்காசி வடக்கு மாவட்டச் செயலராக எம்.சுசிகரன் ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

புதுக்கோட்டை நிா்வாகிகள் மாற்றம்: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அண்மையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அவா் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் அனைவரையும் கட்சிப் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உள்ளாா். அவா்களுக்குப் பதிலாக புதிய நிா்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.