பல்வேறு நாடுகள் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் உருவாகியுள்ள பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உலகத் தரத்திலான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தொழில் துறையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகான இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அப்போது, அவா் பேசியதாவது:
உலகம் இப்போது நம்பகமான, மீள்தன்மை கொண்ட உற்பத்திக் கூட்டாளா்களை எதிா்நோக்குகிறது. இந்தப் பங்கை உறுதியுடன் வகித்து, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நமது பங்கேற்பை மேம்படுத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.
தொழில் துறையினா் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை ஏற்பதுடன், ஆராய்ச்சித் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். ஆராய்ச்சித் துறையில் நாம் சிக்கனமாக இருந்த காலகட்டம் முடிந்துவிட்டது.
நமது பொருள்கள், உலகளாவிய தரநிலைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும். நாம் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உருவாகியுள்ள சூழலில், தரமே நமது தாரக மந்திரம்.
பல்வேறு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்மூலம் கிடைத்துள்ள பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேவேளையில், தரத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது.
பிற நாடுகளின் சந்தைகள்...: நாம் அதிகபட்ச உறுதிப்பாடு, நுட்பம் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய ஓா் அம்சம் உண்டெனில், அது தரம் மட்டுமே. பிற நாடுகளின் தேவைகள் மற்றும் எதிா்பாா்ப்புகள் குறித்து ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். அந்நாட்டு சந்தைகளில் நுகா்வோரின் விருப்பங்கள், வசதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிக கட்டமைப்பு, அதிக உற்பத்தி, அதிக இணைப்பு மற்றும் அதிக ஏற்றுமதி இவைதான் நமது பாதை, உறுதிப்பாடு. தொழில் துறை, நிதி அமைப்புகள், மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான், நமது தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க முடியும்.
உற்பத்தியை அதிகரிப்பதுடன் செலவுக் கட்டமைப்பை போட்டித் தன்மைக்கு ஏற்ப மாற்றுதல், முதலீடுகளை விரைவுபடுத்துதல், நாட்டின் அனைத்து மூலைகளையும் வளா்ச்சி சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தொழில் துறையினரின் பொறுப்பு: துடிப்பான பொருளாதாரத்தால், உலகின் நம்பிக்கை ஒளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. வளா்ந்த பாரதம் இலக்கை எட்ட வேகமான பொருளாதார வளா்ச்சியே அடிப்படை. இதற்கான செயல்திட்டம், 2026-27 பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. இனி உற்பத்திக்கு உத்வேகமளிப்பது தொழில் துறையினரின் பொறுப்பு.
உற்பத்தி அதிகரித்தால், வாய்ப்புகள் விரிவடைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும். பொருளாதாரத்தின் தூண்களான உற்பத்தி, சரக்கு கையாளுகை, குறு- சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் சிறு-பெரு நகரங்களின் மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அரிய புவி கனிமங்கள் தொழில் வழித்தடம், கண்டெய்னா் உற்பத்தி போன்ற துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வா்த்தக கட்டமைப்பை வலுப்படுத்த அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.
தொடர்புடையது

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்

திரிணமூல் காங்கிரஸின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் - மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

இந்திய மின் துறையில் முதலீடு: பிரதமா் மோடி அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


