2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்...

railway office

திருச்சி ரயில்வே அலுவலகம்

Published On :

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என தெற்கு ரயில்வே ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

ஹிந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் ஹிந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான ஹிந்தித் திணிப்பு செயலில் இறங்கியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு வெளியே திரண்ட திமுகவினர், கல்வெட்டில் உள்ள ஹிந்திப் பெயரை கருப்பு மை பூசி அளித்தனர்.

இந்த நிலையில், ஹிந்தியில் உள்ள பெயர்களை தமிழ், ஆங்கிலத்தில் மாற்றுவதற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, மார்க்சிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

Summary

Approval to remove Hindi name from Trichy Railway office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.