அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
விஜய் பேசியதாவது:
“நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரையும், பிரச்னை என்றால் வழக்கறிஞரையும் தேடிச் செல்வது மனித இயல்பு. ஆனால், நாம் நாள்தோறும் உணவு சாப்பிடும்போது நம்மை அறியாமலேயே அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
அந்த மதிப்பிற்குரியவர்கள் விவசாயிகள். இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்த கடவுளுக்கு படையல் போடுபவர்கள்தான் நமது விவசாயிகள்.
அடுத்த ஜென்மம், மறுபிறவி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. அது உண்மையென்றால், அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். விவசாயம் பற்றி தெளிவாக எனக்கு தெரியாது. மற்றவர்களை மாதிரி நானும் டெல்டாகாரன் எனக் கூற வரவில்லை.
விவசாயத்தைப் பற்றி தெரியவில்லை என்றாலும், அவர்களின் கஷ்டங்கள் தெரியும். எனது அரசியல் பயணம் பரந்தூரில் இருந்துதான் தொடங்கியது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் விவசாயிகள் பிரச்னையும் ஒன்று” எனத் தெரிவித்தார்.
summary
TVK Vijay wishes to be born into a farming family in his next life!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

என்.டி.ஏ.வுடன் தவெக கூட்டணி? மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!

நல்லகண்ணு மறைவு! தவெக தலைவர் விஜய் அஞ்சலி!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

