

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வருகின்ற ஜன. 25 ஆம் தேதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, மீண்டும் கட்சி நிகழ்வில் விஜய் உரையாற்றவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு மாதமாக ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்று விவகாரம், கரூர் நெரிசல் பலி வழக்கில் சிபிஐ விசாரணை என அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை விஜய் சந்தித்து வருகிறார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கும் நிலையில், தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் கூட்டணி, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளின் கீழ் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும், ஜன நாயகன் தணிக்கை விவகாரம், சிபிஐ விசாரணை குறித்து எவ்வித கருத்தும் இதுவரை விஜய் தெரிவிக்காத நிலையில், செயல்வீரர்களின் கூட்டத்தில் இதுகுறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.