நாட்டை உலுக்கிய அத்துமீறல் விடியோ! கேரள பெண் கைது!

கேரள பேருந்தில் ஒருவர் அத்துமீறியதாக விடியோ வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
தற்கொலை செய்துகொண்ட தீபக், கைதாகியுள்ள ஷிம்ஜிதா முஸ்தபா
தற்கொலை செய்துகொண்ட தீபக், கைதாகியுள்ள ஷிம்ஜிதா முஸ்தபா Photo: X
Updated on
1 min read

கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா (வயது 35) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், பேருந்து பயணத்தின் போது ஒருவர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பரவிய விடியோவில் தன் மீதான குற்றச்சாட்டை கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக் என்பவர் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகத்தில் பிரபலமடைய வேண்டுமென்றே விடியோவை பதிவு செய்து போலிக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக ஷிம்ஜிதாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து ஷிம்ஜிதா மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதனிடையே, ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வடக்கரை பகுதியில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை கேரள காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

Summary

The assault video that shook the nation: Kerala woman arrested!

தற்கொலை செய்துகொண்ட தீபக், கைதாகியுள்ள ஷிம்ஜிதா முஸ்தபா
கையில் சிகரெட், 120 கி.மீ. வேகம்! எச்சரித்த கார்.. இறுதியில் 4 இளைஞர்கள் பலி! விடியோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com