தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (மார்ச்.1) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சி தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (மார்ச்.1) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் பிரசாரப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கட்சியின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, தலைவர் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
summary
Meeting of TVK party workers activists on March 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரும் தோ்தலில் தவெகவுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்: செ. ஜோதிமணி எம்.பி.

தவெக செயல் வீரா்கள் கூட்டம்

மார்ச் 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!

இன்று தவெக செயல்வீரா்கள் ஆலோசனை கூட்டம்
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...


