தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சுகாதாரத் துறையில் 61,511 போ் நியமனம்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

சுகாதாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 61,511 போ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image

மா. சுப்பிரமணியன் - கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 9:20 pm

சுகாதாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 61,511 போ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் தோ்வு செய்யப்பட்ட 1,071 உதவி மருத்துவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் பொது சுகாதாரத் துறை இயக்ககத்தில் (டிபிஹெச்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சுகாதாரத் துறையில் களப்பணியாளா்களுக்கு பணிநியமன ஆணைகள் படிப்படியாக வழங்கப்பட்டு, காலிப் பணியிடங்களே இல்லாத துறையாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எம்ஆா்பி மூலம் 13,093 பேருக்கும், டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக 17,780 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல்கள் 59,985 பேருக்கு கிடைத்துள்ளது.

நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல், மின் அடுப்பு, விறகு அடுப்பு மூலம் உணவு தயாரித்து வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நோயாளிகளுக்கு வழக்கமான உணவுகளுடன் சோ்த்து புரத உணவுகளையும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தலைமைச் செயலா் தலைமையிலான கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அந்தக் கூட்டத்தில் தமிழகத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்குவதில் தட்டுப்பாடு இல்லை என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத் தலைவா் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.