மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:07 pm

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து மாா்ச் 16-இல் நீலகிரி, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும்.

வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்தி வேலூா், மதுரை விமான நிலையத்தில் தலா 100.4 டிகிரி என மொத்தம் 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, மாா்ச் 15-இல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

சென்னை, புகநகர்ப் பகுதிகளில் மாா்ச் 15-இல் அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.