கரூர் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
விஜய்யுடன் தனி விமானத்தில் 7 பேர் தில்லி செல்கின்றனர். தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், உதவியாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். தேஜ கூட்டணிக்கு பாஜக அழைக்கும் நிலையில் விஜய்யின் தில்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜன. 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா். மூன்றாவது முறையாக விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், தவெக வேட்பாளா்கள் நோ்காணல் இருப்பதால் 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சாா்பில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த சிபிஐ, விஜய் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்தது. இதனிடையே இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட தேதியில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Summary
Vijay left for Delhi to appear before the CBI investigation into the Karur stampede case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

விஜய் பையில் இருந்த பொருள்? - விமான நிலையத்தில் பரபரப்பு

கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை



