ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக! ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

சினிமாவில் என் தலைவர் ரஜினி என்றவர் விஜய் என ஆதவ் அர்ஜுனா பேச்சு...

News image
ஆதர் அர்ஜுனா - படம் - எக்ஸ்
Updated On :17 மார்ச் 2026, 4:34 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தமிழக வெற்றிக் கழகம் என்று அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

''தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு வாரமாக கடும் மன வலியில் இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

தவெகவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அசோக்கை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ''தவெகவுக்கு வர வேண்டும் என்றால் நேர்மை, உண்மை என்ற தகுதி இருந்தால் போதும். நம் அன்புக்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் என் தலைவர் ரஜினி என்றவர் விஜய்.

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆனால், தவெக அடிபணியவில்லை.

ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் இல்லை. எனக்கு ஆஃபர் தேவையில்லை. தமிழக மக்களின் நலனே, நம்பிக்கையே முக்கியம் எனக் கூறினார் விஜய்.

முதல்வர் பதவிக்காக தில்லிக்கு அடிபணிய மாட்டோம். மதச்சார்பற்ற அரசை அமைக்கும் வலிமையை மக்கள் தருவார்கள்.

பராசக்தி படத்தை வெளியிட மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு வரும் பழக்கம் இல்லை. பராசக்தி வெளியிடப்பட்ட நிலையில், ஜனநாயகன் நிறுத்தப்பட்டதற்கு அரசியல்தான் காரணம். இந்த அரசியலை அச்சமின்றி விஜய் எதிர்கொள்வார் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.