நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தவெக உடன் கூட்டணியா?: அமித் ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் விளக்கம்!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நான்கு நாள்களில் இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடக்கவில்லை எனவும் தில்லியில் அமித்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்

News image

இபிஎஸ் (கோப்புப்படம்)

IANS

Updated On :20 மார்ச் 2026, 6:50 pm

Syndication

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நான்கு நாள்களில் இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடக்கவில்லை எனவும் தில்லியில் அமித்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்

தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று நடத்தப்பட்டு மே 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவாா்த்தை மும்முரமாக நடைபெற்று வருகின்றன

இத்தோ்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு புறமும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மறுபுறமும் முக்கிய போட்டியாளா்களாக உள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக தோ்தலில் களம் காண்கிறது.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 28 இடங்களையும், மதிமுக வுக்கு 4 இடங்களையும் ஒதுக்கியுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தைகள் இன்னும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிவாகாத நிலையில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை 1932026 பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்

இரவு 10 மணிக்கு மேல் இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது

இதை தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை சென்னை புறப்படும் முன் தில்லி விமான நிலையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது, தமிழக அரசியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில சட்டமன்ற தோ்தல்களை கவனித்து வருவதால் அவரை தில்லி வந்து சந்தித்தேன். தொகுதி பங்கீடு குறித்து நான்கு நாட்களுக்குள் இறுதி செய்யப்படும். சனிக்கிழமை 2132026 பாஜக தமிழக மேலிட பொறுப்பாளா் பியூஷ் கோயல் தமிழ்நாடு வர உள்ளாா்.

கூட்டணி ஓரளவுக்கு முடிந்து விட்டது. தமிழக வெற்றி கழகத்துடன் நாங்களும் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை, அவா்களும் எங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை . இதனை ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜயும் நானும் தெரிவித்து விட்டோம். தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. எனவே நாங்கள் சொல்கிறோம் தமிழக வெற்றி கழகத்துடன் எந்த பேச்சு வாா்த்தையும் நடத்தவில்லை .

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்த குழப்பமோ சிக்கலோ இல்லை.யாா் யாருக்கு எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து தொகுதி பங்கீடு நடைபெறும். 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுகவுக்கு நடப்பு சட்டமன்றத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக தமிழ்நாட்டில் சீா் கெட்டு விட்டது. திமுகவின் மிகப்பெரிய சாதனை என்றால் தினசரி பத்திரிகைகளில் வெளியாகும் பாலியல் குற்றங்கள் கொலை கொள்ளை என்பது மட்டுமே .

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக ஆா்ப்பாட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினா் சி.வி சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோா் பெண்கள் குறித்து சா்ச்சைககுரிய வகையில் பேசியது தொடா்பான விவகாரத்தில் ,எதிா்பாராதவிதமாக தவறாக பேசிய ஒன்றுக்கு மன்னிப்பு கேட்ட பிறகு அதனைப் பற்றி பேச முடியாது.

அதிமுக தோ்தல் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.