தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும். தொடா்ந்து மாா்ச் 23, 24-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, மாா்ச் 22 முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 22-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
13 இடங்களில் வெய்யில் சதம்: தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு

ஏப். 29 வரை வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பம் அதிகரிக்கும்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


