முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

9 ஆண்டுகளுக்குப் பின்... அதிமுக அலுவலகத்தில் டிடிவி தினகரன்!

அதிமுக அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் வருகை பற்றி...

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Published On :

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக மூத்த நிர்வாகிகளும் வரவேற்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளும், அதில், தமாகா-க்கு உள் ஒதுக்கீடாக 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமகவுக்கு 17 தொகுதிகளும், அமமுகவுக்கு 10 அல்லது 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சுமார் 9 ஆண்டுகள் கழித்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

After 9 years... TTV Dhinakaran at the AIADMK office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.