தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று(மார்ச் 23) சென்னை வந்தடைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தாகவுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோரும் தில்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சு இன்று, இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகிறது.
இதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் கே. பி. முனுசாமி, வளர்மதி, சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ் உள்ளிட்டோர் அதிமுக அலுவலகம் வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதிமுக அலுவலகம் வருகைதரவுள்ளார். அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இன்னும் சற்று நேரத்தில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ள 45 தொகுதிகளில் அமமுகவுக்கு 10 தொகுதிகளை உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட உள்ளதாகவும் மீதமுள்ள தொகுதிகளை தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுக்கு 29 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Summary
Union Minister and BJP Tamil Nadu election in-charge Piyush Goyal has arrived in Chennai today (March 23) to hold seat-sharing talks, and the National Democratic Alliance seat-sharing agreement is set to be signed shortly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையொப்பம்! யார் யாருக்கு எவ்வளவு?

என்டிஏ தொகுதிப் பங்கீடு பேச்சு! பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை!

மார்ச் 23ல் பியூஷ் கோயல் சென்னை வருகை? அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையெழுத்து?

பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


