- எஸ்.குமார்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சுமார் 35 ஆண்டுகளாக கட்சி அலுவலகம், கொடிக் கம்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு தேர்தல் நேரத்திலும் அரசியல் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. கோவை அருகே கணுவாய் மலையடிவாரத்தில் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமம்தான் அது.
இந்தக் கிராமத்தின் வித்தியாசமான கட்டுப்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு ஒரு தேர்தல் நேரத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவமே காரணம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபோது காளப்பநாயக்கன்பாளையத்தில் இருதரப்பு கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த ஊரில் கடந்த 35 ஆண்டுகளாகத் தேர்தல் தொடர்பாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் நேரத்திலும் கட்சிக் கொடி, தோரணம் கட்டப்படுவதில்லை. சுவரொட்டி ஒட்டப்படுவதில்லை. சுவர் விளம்பரம் செய்யப்படுவதில்லை. பொதுக்கூட்டம் போன்றவையும் நடத்தப்படுவது இல்லை.
கட்சி வேட்பாளர்கள் தெருவில் நின்று வாக்கு சேகரிப்பது மட்டும் வழக்கத்தில் உள்ளது. கட்சிக் கொடியுடன் வாகனங்களில் வந்து பிரசாரம் செய்யவும், கட்சிக் கொடியுடன் பேரணியாகச் சென்று பிரசாரம் செய்யவும் அனுமதிப்பது இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இங்கு சில மாதங்களுக்கு முன்பு கட்சிக் கொடி நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதால் தேர்தல் மோதல், தகராறு, வழக்குகள் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனாலும், இந்தக் கிராமத்தில் பொதுவாக வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் விளம்பரத்தை அனுமதிக்காத அதிசய கிராமங்கள்!

அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?

ஆண்டிபட்டி அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


