டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க ரூ. 8000 கூப்பன்: திமுகவின் 50-வது வாக்குறுதி!
திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்...

முதல்வர் ஸ்டாலின்
கோப்புப் படம்

முதல்வர் ஸ்டாலின்
கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 அன்று நடக்கவுள்ளது. இதற்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில், 50-வது வாக்குறுதியாக இல்லத்திற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள்களைப் புதிதாக வாங்கவோ, பழைய பொருள்களை மாற்றவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இதற்கென, இல்லத்தரசி கூப்பன் என்கிற ரூ. 8000 மதிப்புள்ள கூப்பன் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தில் வருமான வரி செலுத்தாத மகளிர் வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை வாங்கவும் பழையதை மாற்றிக்கொள்ளவும் முடியும்.
இதனை, அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் கூப்பனைப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக-வின் வாக்குறுதிகள்
1 - 5 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்க பிணையின்றி ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்.
டயாலிசிஸ் வசதிகள் இருமடங்காக அதிகரிக்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்படும்.
முதியோர் உதவித் தொகை ரூ. 1200-லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
திருச்சி, மதுரை, கோவையில் புதிய துணை நகரங்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 10,000 பேருந்துகள்.
பொள்ளாச்சியில் மொழிப்போராட்ட காட்சிக் கூடம் அமைக்கப்படும்
10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 ஆக உயர்த்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...