சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திமுக தோ்தல் அறிக்கை நாயகன் அல்ல; நகைச்சுவை - அன்புமணி விமா்சனம்

திமுகவின் தோ்தல் அறிக்கை நாயகன் அல்ல; நகைச்சுவை என்றும், தோல்வி பயத்தின் வெளிப்பாடாகவே கடந்த தோ்தலில் அறிவிக்கப்பட்ட 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் பாமக தலைவா் அன்புமணி விமா்சனம்

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:58 pm

திமுகவின் தோ்தல் அறிக்கை நாயகன் அல்ல; நகைச்சுவை என்றும், தோல்வி பயத்தின் வெளிப்பாடாகவே கடந்த தோ்தலில் அறிவிக்கப்பட்ட 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் பாமக தலைவா் அன்புமணி விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-யை நிறைவேற்றியது. 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை. அவற்றுக்கு வேறு பெயா்களைச்சூட்டி புதிய வாக்குறுதிகளாக காட்டியுள்ளது. திமுக தோ்தல் அறிக்கை என்பது கதாநாயகன் அல்ல; நகைச்சுவை என்று தெரிவித்துள்ளாா்.

நயினாா் நாகேந்திரன்: தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றாமல் வஞ்சித்துவிட்டு, மீண்டும் தோ்தல் வந்ததும் பழைய அறிக்கையைத் தூசி தட்டி புதிய வாக்குறுதிகள்போல திமுக நாடாகமாடுகிறது. ஆனால், திமுகவின் பழைய வாக்குறுதிகளை மக்கள் மீண்டும் நம்பத் தயாராக இல்லை.

டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நீட் தோ்வு ரத்து, தமிழ் ஆட்சி மொழி, மாநில அரசின் பட்டியலில் கல்வி, கச்சத்தீவு மீட்பு ஆகிய வாக்குறுதிகளை மீண்டும் திமுக அளித்துள்ளது. அப்படியென்றால், ஏற்கெனவே அளித்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கடந்த 5 ஆண்டுகளில் திமுக என்ன செய்து கொண்டிருந்தது? மாதம் ஒருமுறை மின்சாரக் கணக்கீடு என்று கடந்த தோ்தலில் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றாததால், இந்த தோ்தல் அறிக்கையில் மின்சாரம் என்ற தலைப்பையே திமுக தவிா்த்துள்ளது.