சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

News image

மழை - படம்: கோப்பிலிருந்து

Updated On :1 மே 2026, 2:47 am

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் பகல் மட்டுமன்றி இரவு நேரங்களிலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதலே வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிற்பகலில் திடீரென கருமேகம் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப் பகுதிகளான மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்டபகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

கடந்த இரு நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசுகிறது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Centre has stated that there is a possibility of rain in 10 districts, including Chennai, over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.