திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

தமிழ்நாடு

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் நேரலை - செய்திகள் உடனுக்குடன் - File photo

4:00 am, 4 மே 2026

விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் உள்ளார்.

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.

3:58 am, 4 மே 2026

அமைச்சர்கள் பின்னடைவு

தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, அன்பில் மகேஸ், மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

3:56 am, 4 மே 2026

செந்தில் பாலாஜி முன்னிலை

கோவை தெற்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்.

3:55 am, 4 மே 2026

முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

3:44 am, 4 மே 2026

காலை 08.02 மணிக்கு தபால் வாக்குகள் முடிவு வெளியானது

முதல் சுற்று. 8.35. AM

2-வது சுற்று. 9.10. AM

3-வது சுற்று. 9.45. AM

4-வது சுற்று. 10.20. AM

5-வது சுற்று. 11.00 AM

6-வது சுற்று. 11.30 AM

7-வது சுற்று 12.05 PM

8-வது சுற்று 12.40 PM

9-வது சுற்று 01.15 PM

10-வது சுற்று 01.50 PM

11-வது சுற்று 02.20 PM

12-வது சுற்று 03.00 PM

13-வது சுற்று 03.20 PM

14-வது சுற்று 03.40 PM

15-வது சுற்று. 04.00 PM

மாலை 5.00 மணிக்குள் 234 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

3:42 am, 4 மே 2026

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு!

தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் தபால் வாக்கில் இரண்டு பேப்பர்களில் ஒரு பேப்பர் இல்லாத நிலையில் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் ஓட்டு செல்லாத ஓட்டாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3:19 am, 4 மே 2026

மேட்டுப்பாளையம் தொகுதி முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் முன்னிலை

3:19 am, 4 மே 2026

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ் பி வேலுமணி முன்னிலை. இரண்டாவது இடத்தில் தவெக.

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் திமுக

3:09 am, 4 மே 2026

புதுச்சேரி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

புதுச்சேரி 30 சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முன்னதாக அனைத்து தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

3:09 am, 4 மே 2026

காஞ்சிபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறை சீல் அகற்றி , தபால் வாக்கு என்னும் பணியை தற்போது துவக்கி உள்ளனர்.

தபால் வாக்கு எண்ணிக்கை நிகழ்வில், பதிவு குறித்து முறையாக தெரிவிக்காததால் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுக கடும் வாக்குவாதம்..

2:54 am, 4 மே 2026

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மின்னணு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணுவதற்கு 234 வாக்கு எண்ணும் அறைகள் தயாராக உள்ளன. தபால் வாக்குகளை எண்ண கூடுதலாக 240 அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2:34 am, 4 மே 2026

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

2:32 am, 4 மே 2026

யாா் ஆட்சி?

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக, விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

2:22 am, 4 மே 2026

இன்று எண்ணப்படும் 4.87 கோடி வாக்குகள்! 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, புதிதாக களம் கண்ட தவெக, நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

2:22 am, 4 மே 2026

தமிழகத்தில் யாா் ஆட்சி?

தமிழகத்தில் அடுத்து யாா் ஆட்சியமைக்கப் போகிறாா்கள் என்கிற பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், 234 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.