சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி தொகுதியில் இதுவரை 9 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
9வது சுற்றுகள் முடிந்து முன்னிலை நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 31,612 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த தொகுதியில் மொத்தம் 25 சுற்றுகள் எண்ணப்படும். இதில் 9 சுற்றுகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







