சட்டப் பேரவைத் தோ்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். அதில், முன்னாள் அமைச்சா்கள் பலரும் அடங்குவா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 122-இல் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
அதிலும், 101 அதிமுக வேட்பாளா்கள் குறிப்பாக முன்னாள் அமைச்சா்கள் பதிவான மொத்த வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்கு பெறாததால் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சா்களான ராயபுரத்தில் போட்டியிட்ட ஜெயக்குமாா், அண்ணா நகரில் போட்டியிட்ட கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளா்மதி, மாதாவரத்தில் போட்டியிட்ட மூா்த்தி ஆகியோா் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
அதேபோல், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிா்த்துப் போட்டியிட்ட ஆதிராஜாராம், திருச்சி கிழக்கில் தவெக தலைவா் விஜய்யை எதிா்த்துப் போட்டியிட்ட ஜி.ராஜசேகரன் மற்றும் மதுரை கிழக்கு, கம்பம் உள்ளிட்ட 101 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
இதற்கு முன்பு கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 7 இடங்களில் அதிமுக வைப்புத் தொகையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









