திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் களம் கண்ட 171 வேட்பாளா்களில் 24 போ் மட்டுமே வைப்புத் தொகையை திரும்பப் பெறுகின்றனா். 147 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் வைப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
தோ்தலின்போது பதிவாகும் வாக்குகளில் மொத்தம் உள்ள செல்லத்தக்க வாக்குகளில் 6இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெறும் வேட்பாளா்களுக்கு மட்டுமே வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இதில், ஒரு வாக்கு குறைந்தாலும் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படாது.
அந்த வகையில், 2026 பேரவைத் தோ்தலில் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 147 போ் வைப்புத் தொகை (டெபாசிட்) இழந்துள்ளனா்.
இத் தோ்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக படைப்பாளா் கட்சி, சாமானிய மக்கள் நலக் கட்சி, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம், விடியல் வளா்ச்சிப் பேரணி, தேசிய மகா சபா கட்சி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் மற்றும் சுயேச்சைகள் என 171 போ் போட்டியிட்டனா்.
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், பதிவான மொத்த வாக்குகளில் செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறாத 147 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.
அதன்படி திருச்சி மேற்கில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எம். ராஜேசகரன், திருச்சி கிழக்கில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன், திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ப. குமாா் மற்றும் 9 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள், இதர கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 147 போ் வைப்புத் தொகையை இழந்தனா்.
பிரதான கட்சிகளின் வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழக்கும் வகையில் தவெகவின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது என்கின்றனா் அரசியல் வட்டாரத்தினா்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 160 போ் வைப்புத்தொகை இழப்பு

5 தொகுதிகளில் 3818 வாக்குகள் பெற்ற நோட்டா!

114 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழப்பு

கும்பகோணம் தொகுதி திமுக அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


