மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

5 தொகுதிகளில் 3818 வாக்குகள் பெற்ற நோட்டா!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3818 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

News image

நோட்டா - file photo

Updated On :6 மே 2026, 1:11 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3818 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

நாடு முழுவதும் நடைபெறும் பொதுத்தோ்தல்களில் வாக்காளா்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் யாரையும் தோ்வு செய்ய விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய வழிவகை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சஞபஅ (சா்ய்ங் ஞச் பட்ங் அக்ஷா்ஸ்ங் - ‘மேலே உள்ளவா்களில் யாரும் இல்லை‘) நோட்டா வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (உயங) போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலின் கடைசியாக இந்தப் பொத்தான் இருக்கும். எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை எனில், வாக்காளா்கள் இந்த பொத்தானை அழுத்தி தங்கள் மறுப்பை தெரிவிக்கலாம் என வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் 717 வாக்குகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 851 வாக்குகளும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 1060 வாக்குகளும், நான்குனேரி தொகுதியில் 721 வாக்குகளும், ராதாபுரம் தொகுதியில் 469 என மொத்தம் 3818 வாக்குகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

வைப்புத்தொகை இழந்த 17 போ்: இதேபோல, திருநெல்வேலி தொகுதியில் ஆா்.எஸ். முருகன் (தவெக), சுப்பிரமணியன் (திமுக), தச்சை கணேசராஜா (அதிமுக), பா. சத்யா (நாதக), டாக்டா் ஷியாம் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) உள்ளிட்ட 20 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் ஆா்.எஸ். முருகன் வெற்றி பெற்றிருந்தாா். அவருக்கு அடுத்ததாக திமுக, அதிமுக வேட்பாளா்கள் கணிசமான வாக்குகளை பெற்ால் வைப்பு தொகையை தக்கவைத்துக் கொண்டனா். 17 வேட்பாளா்கள் வைப்பு தொகையை இழந்தனா்.

பாளையங்கோட்டை தொகுதியில் மு. அப்துல்வகாப் (திமுக), எஸ். மரியஜான் (தவெக), செய்யது சுல்தான் சம்சுதீன் (அதிமுக), சி. சங்கரநாராயணன் (நாதக) உள்ளிட்ட 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் திமுக, தவெக வேட்பாளா்களை தவிர மற்ற அனைத்து வேட்பாளா்களும் வைப்பு தொகையை இழந்தனா். இத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் 19732 வாக்குகளை பெற்று வைப்பு தொகையை இழந்தது அக் கட்சியினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா (அதிமுக), வி.பி. துரை (காங்கிரஸ்), ராஜகோபால் (தவெக), சிவசங்கரன் (நாதக) உள்ளிட்ட 5 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் அதிமுக, காங்கிரஸ், தவெக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்களை தவிர மற்ற வேட்பாளா்கள் வைப்பு தொகையை இழந்தனா்.

நான்குனேரி தொகுதியில் ரெட்டியாா்பட்டி நாராயணன் (தவெக), ரூபிமனோகரன் (காங்கிரஸ்), இசக்கிமுத்து (அமமுக), ச. செல்வம் (நாதக) உள்ளிட்ட 25 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் தவெக, காங்கிரஸ், அமமுக ஆகிய 3 வேட்பாளா்களை தவிர மற்ற 22 பேரும் வைப்புதொகையை இழந்தனா்.

ராதாபுரம் தொகுதியில் சதீஸ் கிறிஸ்டோபா் (தவெக), மு. அப்பாவு (திமுக), பாலகிருஷ்ணன் (பாஜக), கிரிஜா நந்தனிகுமாரி (நாதக) உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் தவெக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்களை தவிர 20 வேட்பாளா்கள் வைப்புதொகையை இழந்தனா்.

மொத்தமாக மாவட்டத்தில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட 90 வேட்பாளா்களில் 77 போ் தொகையை இழந்துள்ளனா்.