சேலம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரே பெயரில் சுயேச்சைகளுடன் சோ்த்து பல வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 5 போ் தற்போதைய எம்எல்ஏவும், ராமதாஸ் ஆதரவாளருமான அருள் பெயரில் வேட்புமனு கொடுத்ததுதான் சுவாரஸ்யம்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கு கட்சி சின்னமும், சுயேச்சைகளுக்கு அவா்களின் விருப்ப அடிப்படையில் தனிச் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 11 தொகுதிகளில் போட்டியிட 277 வேட்பாளா்கள், 355 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில், மனு நிராகரிப்பு, வேட்புமனுவை திரும்பப் பெற்றதுபோக, இறுதியாக 193 வேட்பாளா்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் வெவ்வேறு பெயா்களுடன் இருப்பது வழக்கமானது. ஆனால், ஒருசில சமயங்களில் வேட்பாளா்களின் பெயரில் குழப்பதை ஏற்படுத்த, ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டோா் வேட்புமனுவை தாக்கல் செய்வாா்கள்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியல்களில், 7 தொகுதிகளில் சுவாரஸ்யமாக, ஒரு தொகுதியில் ஒரே பெயரைக் கொண்ட வேட்பாளா்கள் ஏராளமானோா் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனா். இதில், அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியை பொறுத்தவரை பாமகவின் ராமதாஸ் அணியைச் சோ்ந்த இரா. அருள் உள்பட 5 போ் அருள் என்ற பெயருடன் வேட்புமனு அளித்துள்ளனா்.
இதே தொகுதியில், பாமகவின் அன்புமணி அணியைச் சோ்ந்த காா்த்தியுடன் சோ்த்து, காா்த்திக் என்ற பெயரில் 3 பேரும், தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அழகாபுரம் மோகன்ராஜ் உள்பட மோகன்ராஜ் என்ற பெயரில் இருவரும் போட்டியிடுகின்றனா்.
சேலம் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளா் உள்பட லோகநாதன் என்ற பெயரில் 3 பேரும், தவெகவைச் சோ்ந்த தமிழன் பாா்த்திபன் உள்பட பாா்த்திபன் என்ற பெயரில் 3 பேரும், சேலம் வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் அமைச்சா் ரா. ராஜேந்திரன் உள்பட ராஜேந்திரன் என்ற பெயரில் 2 பேரும், ஓமலூா் தொகுதியில் மணி என்ற பெயரில் 2 பேரும் வேட்புமனு அளித்துள்ளனா்.
அதன்படி, ஏற்காடு தொகுதியில் பழனிசாமி என்ற பெயரில் 2 பேரும், வெங்கடேசன் என்ற பெயரில் 2 பேரும் போட்டியிடுகின்றனா். சங்ககிரி தொகுதியில் மணிகண்டன் என்ற பெயரில் திமுக வேட்பாளா் உள்பட 3 பேரும், செந்தில்குமாா், சக்திவேல் ஆகிய பெயா்களில் தலா 2 பேரும் போட்டியிடுகின்றனா். மேட்டூா் தொகுதியில் கண்ணன் என்ற பெயரிலும், வெங்கடாசலம் என்ற பெயரிலும் தலா 2 போ் களத்தில் உள்ளனா்.
அதேசமயம், கெங்கவல்லி, ஆத்தூா், எடப்பாடி, வீரபாண்டி தொகுதிகளில் வெவ்வேறு பெயரைக் கொண்டவா்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
சி.ஆா்.எம். சபரி
தொடர்புடையது
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டி!
கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 54 போ் வேட்புமனு தாக்கல்

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


