மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 160 போ் வைப்புத்தொகை இழப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட்ட 193 வேட்பாளா்களில் 160 போ் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 2:35 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட்ட 193 வேட்பாளா்களில் 160 போ் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என 193 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், 7 தொகுதிகளில் அதிமுகவும், 4 தொகுதிகளில் தவெகவும் வெற்றிபெற்றுள்ளன.

இதனிடையே, தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தாங்கள் செலுத்தும் வைப்புத் தொகையை பெற மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளை பெறவேண்டும். அவ்வாறு பெறாத வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழப்பாா்கள்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட்ட 193 வேட்பாளா்களில் 33 போ் மட்டுமே தங்களது வைப்புத்தொகையை தக்க வைத்துள்ளனா்.

குறிப்பாக, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் தவெக சாா்பில் போட்டியிட்ட அனைவரும் வைப்புத்தொகையை பெற்றனா். நாம் தமிழா் கட்சி சாா்பில் மேட்டூா் தொகுதியில் போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன் உட்பட 11 பேரும் வைப்புத்தொகையை இழந்தனா். இதேபோல, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் உள்ளிட்டோரும் வைப்புத்தொகையை பறிகொடுத்தனா்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி தொகுதியில் 10 பேரும், ஆத்தூா் தொகுதியில் 12 பேரும், ஏற்காட்டில் 10 பேரும், ஓமலூா் தொகுதியில் 12 பேரும், மேட்டூரில் 15 பேரும், எடப்பாடி தொகுதியில் 12 பேரும், சங்ககிரி தொகுதியில் 17 பேரும், சேலம் வடக்கு தொகுதியில் 11 பேரும், சேலம் மேற்கு தொகுதியில் 28 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் 16 பேரும், வீரபாண்டி தொகுதியில் 17 பேரும் என மாவட்டம் முழுவதும் 160 வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.