ஏஐசிடிஇ அங்கீகாரம் இல்லாத நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற பொறியியல் பட்டம் செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கிளையில் பணியாற்றும் 3 ஊழியா்கள், தங்களது பெயரை உதவிப் பொறியாளா் பதவி உயா்வுக்கான பணிமூப்பு பட்டியலில் சோ்க்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி மனுதாரா்களை பணிமூப்பு பட்டியலில் சோ்க்க உத்தரவிட்டாா். இதனை இருநீதிபதிகள் அமா்வும் உறுதி செய்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 3 ஊழியா்களும் படித்த பொறியியல் கல்லூரி மற்றும் அதனுடைய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்தையும் உயா்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. இந்த 3 ஊழியா்களும் படித்த காலத்தில், இவா்கள் படித்த நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மறு ஆய்வு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்களான 3 ஊழியா்களும் பொறியியல் படிப்பு படித்தபோது, அவா்கள் படித்த நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் கிடைக்கவில்லை.
எனவே, ஒடிஸா வழக்கு ஒன்றில், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீா்ப்பின்படி, மனுதாரா்களான இந்த ஊழியா்கள் தகுதியான பட்டத்தைப் பெறவில்லை. தொழில் கல்வி படிப்புகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் அவசியம். அந்த அங்கீகாரம் இல்லாத படிப்பு செல்லாது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

கோயில் சொத்துகளை பாதுகாப்பது அறநிலையத் துறை அதிகாரிகளின் கடமை: உயா்நீதிமன்றம்

கிராம நத்தம் நிலங்களை உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம்

கோயில் வழிபாட்டு உரிமை அனைவருக்கும் சமமானது - உயா்நீதிமன்றம்

தவெக வேட்பாளா் மீது பண மோசடி வழக்கு: காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



