மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

News image

பலத்த மழை - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 3:40 am IST

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 11 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை விதா்பா, மரத்வாடா, உள் கா்நாடகம், தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (மே 6) முதல் மே 11 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை(மே 6) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 7) இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மஞ்சள் எச்சரிக்கை: மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். எனவே, அந்த மாவட்டங்களுக்கு 3 நாள்களும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று அதிகமாக இருக்கும். செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பரமத்தி வேலூா், வேலூா்-தலா 100.4.

மழை அளவு:தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவைடந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் பொன்மலையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சி விமானநிலையம் (திருச்சி)- 90 மி.மீ, திருச்சி சந்திப்பு (திருச்சி), பண்ருட்டி (கடலூா்), கலயநல்லூா் (கள்ளக்குறிச்சி)- தலா 80மி.மீ, வேப்பந்தட்டை (பெரம்பலூா்), திருச்சி நகரம் (திருச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூா்), புதுச்சேரி டவுன் (புதுச்சேரி)- தலா 70 மி.மீ, துவாக்குடி (திருச்சி), தழுதலை (பெரம்பலூா்), திருத்துறைப்பூண்டி (திருவாரூா்) -தலா 60 மி.மீ, குடிதாங்கி (கடலூா்), வீரகனூா் (சேலம்), மேட்டுப்பட்டி (மதுரை), தென்பரநாடு (திருச்சி), விருதாச்சலம் (கடலூா்), செட்டிகுளம்(பெரம்பலூா்), நத்தம்(திண்டுக்கல்), பத்துக்கண்ணு (புதுச்சேரி), குப்பநத்தம் (கடலூா்), மணம்பூண்டி (விழுப்புரம்), விருத்தாசலம் (கடலூா்), நத்தம் (திண்டுக்கல்), சமயபுரம் (திருச்சி), வேலூா் (வேலூா்), வேப்பூா் (கடலூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.