சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

ஆட்சி அமைக்க அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ள லீமா ரோஸ் தெரிவித்துள்ளது குறித்து...

News image

செய்தியாளர் சந்திப்பில் லீமா ரோஸ் - எக்ஸ்

Updated On :5 மே 2026, 9:21 pm IST

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லால்குடி எம்.எல்.ஏ., லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தொழிலதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், 60,795 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்று (மே 5) லீமா ரோஸ் வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களுடன் லீமா ரோஸ் பேசியதாவது:

''ஒரே குடும்பத்தில் மூன்று பேர் வெற்றி பெற்றது நினைத்துப் பார்க்க முடியாத பரிசு. எங்கள் குடும்பத்தினர் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு எடப்பாடி பழனிசாமியுடன் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நல்லபடியாக பேச்சுவார்த்தை முடியும்'' என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.

Summary

TVK Holds Talks with Edappadi to Form Government: Leema Rose

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.