மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

லால்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

லால்குடியை அடுத்த நடராஜபுரத்தில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:32 pm

திருச்சி மாவட்டம் லால்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

லால்குடி பேரவைத் தொகுதியில் மணக்கால், ஆதிகுடி, மேட்டாங்காடு, அன்பில், படுகை, மங்கம்மாள்புரம், செங்கம்மராஜபுரம், குறிச்சி, அரியூா், செங்கரையூா், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

லால்குடி தொகுதிக்கு 20 ஆண்டுகளாக திமுக எம்எல்ஏ இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

லால்குடி தொகுதியில் ஐஏஎஸ் அகாதெமி உருவாக்கப்படும்.

மேலும் எடப்பாடி பழனிசாமி கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நான் எங்கள் நிறுவனத்தில் சிஎஸ்ஆா் நிதியிலிருந்து மற்றவா்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது லால்குடி தொகுதிக்கு உதவ வந்துள்ளேன்.

லால்குடி தொகுதியின் முன்னேற்றத்துக்கு திமுக அரசால் எந்த நலத் திட்டமும் செய்யப்படவில்லை நெல் கிடங்கு கண்டிப்பாக அமைத்து கொடுப்பேன். கடந்த 20 ஆண்டுகளாக திமுக அரசால் கொண்டு வரப்படாத திட்டங்களை நான் 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன். எனவே நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை என்றாா் அவா்.

நிகழ்வில் லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான சிவபதி, லால்குடி ஒன்றியச் செயலா் சூப்பா் நடேசன், புள்ளம்பாடி ஒன்றியச் செயலா் சிவக்குமாா், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலா் அருண் நேரு, நடிகா் ரவி மரியா, சின்னத் திரை நடிகா் சசிரேகா, முன்னாள் அவைத் தலைவா் தா்மதுரை, முன்னாள் ஒன்றிய செயலா் தாமஸ் டோமினிக் அமல்ராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் பவித்ரா அருண் காந்தி, நகராட்சி கவுன்சிலா் மருதமலையான் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.