ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல: அமீர்

தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளது குறித்து...

News image

அமீர் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 9:05 pm IST

தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி விவகாரத்தில் விசிகவும், கம்யூனிஸ்ட்டுகளும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் அமீர் தனது சமூக வலைதளப் பதிவில், ''விசிகவும், கம்யூனிஸ்ட்டுகளும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம்'' என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து இன்று (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் திட்டமிட்டபடி நாளை முதல்வராகப் பதவியேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மற்ற கட்சிகளிடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது.

எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.

Summary

It is not advisable for the VCK and the Communists to delay: Ameer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.