இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம் கூறிய இயக்குநர் அமீர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.
நடிகராக விஜய் கடைசியாக நடித்த ஜன நாயகன் படத்தின் ஆன்லைன் வெர்ஷன் சட்டத்துக்கு புறம்பாக நேற்று (ஏப்.10) இணையத்தில் வெளியானது.
இந்தப் படத்தினை வெளியிட்டவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், இந்தப் படத்தினை பகிரவோ தரவிறக்கம் செய்யவோ கூடாதென படக்குழு வக்கீல் நோட்டீஸ் அளித்திருந்தது.
இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் ஆப்பில் இந்தப் படம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், “கசிந்திருக்கும் ’ஜனநாயகன்’ படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? இது தான் தங்களின் அரசியலா? எப்போதுதான் மாறும் இந்த மனநிலை? - அமீர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜன நாயகன் படம் லீக் ஆனதுக்கு சினிமா பிரபலங்கள் கண்டனத்தை முன்வைத்துள்ள நிலையில், இவர் படத்துக்கு விமர்சனம் வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அமீர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதத்தில் இறங்கியுள்ளனர். முன்னதாக, விஜய்யின் விவாகரத்து வழக்கின்போதும், ”சொந்த குடும்பத்தைக் காப்பாற்றாதவர் எப்படி நாட்டை பாதுகாப்பார்?” என வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டிருந்ததும் சர்ச்சையானது.
ஜன நாயகன் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையினால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தவெக கட்சியின் தலைவர் விஜய், ஜன நாயகன் வெளியீட்டை முடக்கியது பாஜக மற்றும் திமுக கட்சி என குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Director #Ameerâs WhatsApp status has sparked debate :
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) April 10, 2026
Referring to a leaked scene from #Jananayagan, he questioned: âAre Muslims always portrayed as terrorists? Is this your politics? When will this mindset change?â
After That Fans Rising Question To Ameer While many from the⦠pic.twitter.com/dnV6anEL44
Summary
Review of the Film 'Jana Nayagan'—Leaked Online! Director Ameer Lands in Trouble!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








