தவெக தலைவர் விஜய் வீட்டில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, வீட்டின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் (பேரிகார்ட்) அகற்றப்பட்டன.
முன்னதாக, விஜய்க்கு அளிக்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு புதன்கிழமை இரவில் திரும்பப் பெறப்பட்டது.
தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான 118 இடங்களைப் பெறாதபோதிலும், முதல்வருக்கு வழங்கப்படும் கான்வாய் பாதுகாப்பு உள்ளிட்டவை விஜய்க்கு வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக, 108 இடங்களை வென்றது. இருந்தபோதிலும், ஆட்சியமைப்பதற்கு போதுமானதாக இல்லாததால், கூட்டணி ஆட்சியமைக்க கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து, 5 இடங்களை வென்ற காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவளித்தது. இருப்பினும், தவெக ஆட்சியமைக்க இன்னும் 6 தொகுதிகள் தேவை.
Summary
Metal detector gates, which were installed outside TVK chief Vijay's residence are being removed today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேரு விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்!
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

