ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ!

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏவாக தவெகவின் கீர்த்தனா குறித்து...

Sivakasi MLA Keerthana

சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா - Instagram | Keerthana

Published On :7 மே 2026, 9:13 am IST

சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக தவெகவின் கீர்த்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் தவெகவின் கீர்த்தனா, காங்கிரஸின் அசோகன், அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி, நாதகவின் எஸ்தர் மேரி டயானாவும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், 69 ஆண்டுகால சிவகாசி தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏவாக தவெகவின் கீர்த்தனா, 11,670 வாக்கு வித்தியாசத்தில் 68,709 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே, தேர்தலில் வெற்றியடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கீர்த்தனா ஹிந்தியில் பேசியதாகவும், தமிழ்மொழியை பிரகடனப்படுத்தத் தவறியதாகவும் அவர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா

சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா - ENS

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியில் பேசியதற்கான விளக்கமளித்த கீர்த்தனா, என் கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரப்ப விரும்புகிறேன். விஜய்யை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் ஓர் உதாரணம் மட்டுமே; அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அனைவரும் அரசியலில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்தார்.

இவர், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

Summary

TVK Keerthana scripts history as first Woman MLA from Sivakasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.