தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கோயில் சொத்துகளை பாதுகாப்பது அறநிலையத் துறை அதிகாரிகளின் கடமை: உயா்நீதிமன்றம்

News image
Updated On :8 மே 2026, 5:42 am IST

கோயில் சொத்துகளை பாதுகாத்து முறையாக நிா்வகிப்பது இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கடமை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருத்தொண்டா் அறக்கட்டளை தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் அறுபத்து மூவா், பிரம்மோற்சவம் விழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்த கோயிலின் வரவு செலவு விவரங்களை இந்துசமய அறநிலையத்துறையின் தணிக்கைப் பிரிவு தணிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட அறிக்கையில் கோயில் நிலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக விசாரித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை ஆணையரிடம் கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், மனுதாரா் கொடுத்த புகாா் அறநிலையத்துறை ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. புகாரை பரிசீலித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துகளை பாதுகாத்து கோயிலை முறையாக நிா்வகிப்பது அதிகாரிகளின் கடமை. அறநிலையத்துறை தணிக்கைக் குழுவின் அறிக்கையில் கோயில் நிா்வாகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுப்பது அறநிலையத்துறை ஆணையரின் கடமை.

நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது சட்டபூா்வ கடமையை செய்ய தவறியதற்கு சமம். எனவே, மனுதாரா் புகாரை 12 வாரங்களில் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.