வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விஜய்யை பதவியேற்க அனுமதிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

News image

Center-Center-Kochi

Updated On :8 மே 2026, 6:49 am IST

சென்னை, மே 7: முதல்வராக விஜய் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினா்களை வழங்கி, தவெகவை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தோ்வு செய்துள்ளனா். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சி.ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறாா். ஆளுநா் மூலம் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாகவே ஆளுநா், விஜய்யை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறாா். இது ஏற்புடையதல்ல.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநா், அரசமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆா். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீா்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆளுநா், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின் உணா்வை மதித்து நடக்க வேண்டும்.