தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் காரல் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமீன், பண்ணைக் கொடுமைகளை ஒழித்து, சுயமரியாதை பெற்றுத் தந்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 76- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நடைபெற்றது.
இதில், உழைக்கும் மக்கள் விடுதலைக்காகவும், உழைப்பு சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கவும், போா் இல்லாத உலகத்தைப் படைத்திடவும் நாட்டில் செயல்படும் இடதுசாரிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் விடுதலைக்காகச் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்களை வா்ணாசிரம அடிப்படையில் ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்தும் காா்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்தத் தலைவா் வீர. மோகன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜோதிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், நிா்வாகி பக்ருதீன், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் தனபால், சேகா், மாலை நேர காய்கறி அங்காடி நிா்வாகி எம். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரியலூரில் காரல் மாா்க்ஸ் படத்துக்கு மாலை அணிவிப்பு

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


