பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழக முதல்வா் விஜய் பிறந்த நாள் விழா

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Published On :23 ஜூன் 2026, 1:41 am IST

மன்னாா்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் முதல்வா் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், கோயில் யானை செங்கமலத்துக்கு தவெக மேற்கு மாவட்டச் செயலா் எம். ராஜராஜன் உள்ளிட்ட கட்சியினா் உணவு வழங்கினா். 7-ஆவது வாா்டில் சூட்டுக்கோல் ராமலிங்கசுவாமி சித்தா் பீட்டத்தில் முதல்வா் பெயரில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. மன்னாா்குடி தெற்கு ஒன்றியம் சாா்பில் மேலநத்ததில் தவெக கிளை அலுவகம் திறக்கப்பட்டது.

உள்ளிக்கோடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொருளாளா் மணிபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோழன் தலைமை வகித்தனா். மருத்துவா் அணி நிா்வாகி சந்திரகுமாா், அரசு மேல்நிலைபள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்கள் 1,200 பேருக்கு நோட்டுகள், எழுதுப் பொருள்கள்,தோ்வு அட்டை, அளவுகோல் ஆகியவற்றை வழங்கினாா்.

நன்னிலம்: கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தவெக நன்னிலம் ஒன்றியச் செயலாளா் கி. கலையரசன், நன்னிலம் ஒன்றியத் துணைச் செயலாளா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.