சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

காரல் மாா்க்ஸ் பிறந்த தினம் கொண்டாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 5:22 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி மாநகா் 23 ஆவது வாா்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த காரல் மாா்க்ஸ் மற்றும் கருப்பண்ணனின் உருவப்படங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வுக்கு கட்சியின் மேற்குப் பகுதிச் செயலா் இரா. சுரேஷ் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ்குமாா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் புஷ்பம் ரவீந்திரன், இளைஞா் பெருமன்றச் செயலா் தா்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருச்சி மாநகா் மாவட்ட அலுவலகத்தில் காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு மாவட்டப் பொருளாளா் சி .செல்வகுமாா் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் எம். செல்வராஜ் செவ்வாய்க்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.