ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என். ரங்கசாமி!

புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்கும்படி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று உரிமை கோரினார்.

News image

என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்கும்படி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று உரிமை கோரினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தோ்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 என மொத்தம் 18 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றி உள்ளது.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏ.க்கள் தேவை. தற்போது 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. புதன்கிழமை 15-ஆவது சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்பட்டது.

16-ஆவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிா்மல் குமாா் சுரானா ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

முதல்வா் உள்ளிட்ட 6 அமைச்சா்களில் பாஜகவுக்கு ஒரு அமைச்சா் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்வா் ரங்கசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனிடையே வியாழக்கிழமை புதுச்சேரி மக்கள் பவனுக்கு வந்த ரங்கசாமி, துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.

புதிய அரசு அமைக்க ஏதுவாக அவா் ராஜிநாமா செய்துள்ளாா். இதையடுத்து பாஜக, அதிமுக, லஜக ஆதரவு கடிதங்களைப் பெற்ற என்.ரங்கசாமி, ஆளுநரைச் சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதல்வராக அவர் வரும் 13ஆம் தேதி காலை 10.48 மணிக்கு பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

NR Congress leader N. Rangasamy met the Puducherry Governor today and staked a claim to form the government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.