இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

அதிமுகவுக்கு திமுக ஆதரவளிப்பதாக வெளியான தகவல் குறித்து ஜோதிமணி பதிவு...

News image

ஜோதிமணி - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 1:46 pm IST

அதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளியாகிய நிலையில் அதுபற்றி ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஏற்கெனவே ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. விசிக, இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை கடிதத்தைக் கொடுத்தால்தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் கூறி வருகிறார்.

இதனிடையே திமுகவும் அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில்,

"எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் அல்லது திமுக - அதிமுக கூட்டணி உருவாகலாம் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஜோதிமணி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu will never accept DMK - ADMK alliance: Jothimani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.