சென்னை : சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பையாவிடமும் பேரவைச் செயலரிடமும் இன்று (மே 11) கடிதம் வழங்கினர்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏவாகத் தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பதவியேற்பு திங்கள்கிழமை (மே 11) காலை அவை கூடியதும் நடைபெற்ற நிலையில், அதிமுகவில் சி. வி. சண்முகம் தவிர எம்எல்ஏவாகத் தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பேரவை உறுப்பினர்களாக இன்று காலையில் பதவியேற்றனர். இந்த நிலையில், பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க தளவாய் சுந்தரம், ஓ. எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்பட 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர்.
ஆனால், மொத்தமுள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் 36 எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராகவும் ஆவதற்கு ஆதரவளித்து அவா்கள் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிமுகவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரணியில் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதனிடையே, எஸ். பி. வேலுமணி, ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், நெய்வேலி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் சி. வி. சண்முகம் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், எம்எல்ஏவாகப் பதவியேற்க இன்று மாலை மீண்டும் சட்டப்பேரவைக்கு தமது காரில் புறப்பட்ட சி. வி. சண்முகத்திடம் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், “இன்னும் 2 - 3 மணி நேரம் பொறுத்திருங்கள்” எனக் கூறிச் சென்றார். சி. வி. சண்முகம் இன்று மாலையில் எம்எல்ஏவாக தனியாகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் அக்கட்சியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருப்பதை அண்மை சம்பவங்கள் தெளிவாகக் காட்டியுள்ளன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Summary
Only 17 MLAs expressed support for electing Edappadi Palaniswami as the leader of the AIADMK legislative party in the Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பீஸ் கேரியர் திருட்டு போனதா? இபிஎஸ் கேள்வி

ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி

அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி! ராயப்பேட்டையில் குடியேறினார்!

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



