எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம்! அரசாணை வெளியீடு

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்திற்கான அரசாணை வெளியீடு...

News image

முதல்வர் விஜய்க்கு மரியாதை செலுத்திய காவல் துறையினர். - ANI

Updated On :1 மணி நேரம் முன்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று (மே 10) காலை பதவியேற்ற உடனேயே மக்கள் முன்னிலையில் 3 முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார்.

வீடுகளில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் நுகர்வோருக்கு, 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்புப் படை திட்டம் என்ற 3 கோப்பிலும் கையொப்பமிட்டார்.

இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

"பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்.

ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே ஏற்படுத்தவும், இந்த சிறப்புப் படையை, போதுமான ஆளிநர்கள்/பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.

முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மேலே படிக்கப்பட்ட தனது கடிதத்தில் காவல்துறை இயக்குநர்/ காவல் படை தலைவர் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல் தொடர்பான ஆணை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள்:

குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி கற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல்.

பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக் கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுத்தல்.

புகார்கள்மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல்.

பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வனுடன் இதர ஆதரவுகள் கிடைத்திட வகை செய்வது உள்ளிட்ட உதவிகளை உரிய நேரத்தில் செய்தல்

சமூக நலத்துறை, கல்வித் துறை, அரசு சாரா தொண்டு நிறுனங்கள் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருக்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல்

மேலே பத்தி-2ல் உள்ள காவல்துறை தலைமை இயக்குவரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கவும் முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்பளிப்பும் செய்து அரசு ஆணையிடுகிறது. இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

Summary

Singappen Task Force Scheme: Government Order Issued

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.