ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு!

தவெக எம்எல்ஏ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது பற்றி...

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தவெக எம்.எல்.ஏ. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியகருப்பன் வழக்குத் தொடுத்தார். அவரது மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு எனப் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, அந்த வாக்குகளை மீட்டு என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்ததுடன், தபால் வாக்கு, மின்னணு வாக்குகளில் பதிவான சிசிடிவி பதிவு ஆதாரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி அவசர வழக்காக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து, தவெக எம்.எல்.ஏ.வின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Summary

Barred from Participating in Confidence Vote! TVK MLA Appeals to Supreme Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.