25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்; ஆனால், திமுகதான் சீனியர் - உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர்ஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைப் பற்றி...

Udhayanidhi Stalin with Chief Minister Vijay.

முதல்வர் விஜய்யுடன் உதயநிதி ஸ்டாலின். பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன். - படம்: எக்ஸ்.

Published On :12 மே 2026, 11:49 am IST

முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர்ஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவரை அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

தொடர்ந்து பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது உரையைத் தொடங்கினார்.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதல்வர் விஜய் எங்களுடைய தலைவரின் வீடுகளுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவரின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகளைப் பெற்று தெரிவித்திருந்தார். அந்த அரசியல் நாகரிகம் பேரவையிலும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் பேரவையிலே எதிரிக்கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். திமுக என்றைக்குமே ஆக்க சக்திதான்.

பண்பாட்டு ரீதியிலாகவும், பொருளாதார ரீதியிலாகவும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கு பேரவையில் நடைபெற்ற விவாதங்களும், எடுக்க முக்கிய முடிவுகளும், இயற்றப்பட்ட சட்டங்களும்தான் காரணம். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் சேர்ந்து செயல்பட வேண்டும். அதைத் தான் தமிழ்நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். திமுகவும் அதைத்தான் விரும்புகிறது

பேரவைத் தலைவரும், நானும் முதல்வர் விஜய்யும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ச். 1967 ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்தது திமுகதான். அந்த வகையில் எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏன்னென்றால் நமக்கு தமிழ்நாட்டின் மாநில நலன்தான் மிகவும் முக்கியம்.

நானும், முதல்வரும் அவை முன்னவர் செங்கோட்டையனும் உங்கள் கையைப் பிடித்து உங்கள் இருக்கைக்கு அழைத்துச் சென்றோம். அதேபோல, நீங்கள்தான் முதல்வரையும் எங்களையும் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

Summary

"Chief Minister Vijay and I studied at the same college. However, the DMK are the 'seniors' when it comes to running the government," stated Leader of the Opposition Udhayanidhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.