லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக தகவல் வந்தது! திருமாவளவன்

அதிமுக - திமுக கூட்டணி பேச்சு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

I too received information that efforts were underway to make me Chief Minister: Thirumavalavan

முதல்வர் விஜய் / தொல். திருமாவளவன். - கோப்புப்படம்

Published On :12 மே 2026, 1:27 pm IST

அதிமுக - திமுக மற்றும் அதிலுள்ள கூட்டணி கட்சிகள் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் வந்தது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,

"அதிமுக - திமுக மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் என்னை முதல்வராக்க முயற்சி மேற்கொண்டதாக எனக்கும் தகவல் வந்தது. காங்கிரஸ் அதில் எந்தவகையில் தலையிட்டது என்று தெரியாது. இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவை வைத்து எங்கள் உயர்நிலைக் குழுவில் விவாதித்து அதன்பின்னர்தான் முடிவெடுத்தோம். அது தாமதமான முடிவு என்று எல்லோரும் விமர்சிக்கிறார்கள். அரசியல் கட்சி நடத்துபவர்களுக்குதான் இதுபோன்ற முடிவெடுப்பதில் உள்ள சிரமம் தெரியும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. எதிர்காலம் பற்றி யோசிக்காமல் பதவிக்காக முடிவெடுக்க முடியாது.

தவெகவுடன் திரைமறைவு பேரம் எதுவும் நடக்கவில்லை. அது தவறான தகவல். இடதுசாரிகள் போல நிபந்தனையற்ற ஆதரவு இருக்க வேண்டும் என்றுதான் நானும் வலியுறுத்தினேன்.

தற்போது மர்யாதைநிமித்தமாக விஜய் எங்களைச் சந்திக்க வருகிறார். விஜய்யிடம் எந்த நிபந்தனையும் முன்வைக்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

I too received information that efforts were underway to make me Chief Minister: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.